

மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட் டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
மும்பை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது.மும்பை அணியில் இடம் பெற்றுள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் 32 வயதான ஜஸ்பிரித் பும்ரா இந்த சீச னில் சோபிக்கவில்லை. 10 ஆட்டங்களில் வெறும் 3 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலை யில் மும்பை அணி நிர்வாகத்துக்கு இந்திய முன்நாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில யோச னைகளை வழங்கியுள்ளார்.
ரவி சாஸ்திரி கூறுகையில், 'பும்ரா கடந்த 12 மாதங்களாக இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி விட்டு அவரது தடுமாற் றத்துக்கு உடல்ரீதியாக மட்டுமல்ல. மனதளவிலும் மிகவும் சோர்வாக இருப்பது முக்கிய காரணம். எனவே மும்பை அணி நிர்வாகம் அவரை மிக வும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு அடுத்த இரு ஆண்டுகளில் நெருக்கடியான போட்டி அட்டவணை உள்ளது. பல முக்கிய டெஸ்ட் தொடர்கள் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வருகிறது. எனவே அவரது உடற்தகுதி மற்றும் பணிச்சுமையை மிகக் கவனமாக நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும்' என்றார்.