பும்ரா ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர்: எம்.எஸ்.தோனி புகழாரம்
அகமதாபாத்,
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய அணிக்கு அரசியல் பிரபலங்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பதாவது;
அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பயிற்சியாளர் கம்பீர் சிரிப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. பும்ரா ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

