பும்ரா கிடையாது.. எல்லா காலத்திலும் சிறந்த பவுலர் அவர்தான் - டேவிட் லாயிட்


பும்ரா கிடையாது.. எல்லா காலத்திலும் சிறந்த பவுலர் அவர்தான் - டேவிட் லாயிட்
x

image courtesy:PTI

இந்தியா -இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

லீட்ஸ்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்சில் தொடங்க உள்ளது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்த உள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியுமா? என்பது சந்தேகம்தான். இருப்பினும் அவர் விளையாடும் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் பும்ரா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் அசத்தலாக செயல்பட்டார். அதே பார்மை தொடரும் பட்சத்தில் அது இங்கிலாந்து அணிக்கு ஆபத்தாக முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இதனிடையே சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பும்ரா ஒன்றும் அவ்வளவு சிறந்த பந்துவீச்சாளர் கிடையாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரரான டேவிட் லாயிட் தெரிவித்துள்ளார். அவரை விட இங்கிலாந்தின் பிரெட் ட்ரூமேன் எல்லா காலத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றும் லாயிட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்பிரித் பும்ரா ஒரு சிறந்த பந்து வீச்சாளர்தான். ஆனால் அவர் எல்லா காலத்திலும் சிறந்த பந்து வீச்சாளரா? இல்லை. பிரெட் ட்ரூமேன்தான் எல்லா காலத்திலும் சிறந்த பந்துவீச்சாளர்.

பிரெட் அளவுக்கு யாரும் வேகமாக பந்து வீசியதில்லை. 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் யார்? பிரெட். மேலும் அவர் 60 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்" என்று கூறினார்.

1 More update

Next Story