இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்: ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்: ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்
Published on

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், போட்டிக்குப் பிறகு கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இந்தியர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று கூறியுள்ளார். ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:-

மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் இதுவாகும். எங்களை பெரிய அளவில் இந்த தோல்வி காயப்படுத்தப்போகிறது. அனைத்து பாராட்டுக்களுக்கும் இந்தியா தகுதியானது. மிகச்சிறப்பாக இந்திய அணி விளையாடியது. இந்த தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய பாடங்களை கற்போம். ரிஷப் பண்ட் இன்னிங்ஸ் பென்ஸ்டோக்ஸ் பேட்டிங்கை நினைவு படுத்தியது.

இளம் வீரரான சுப்மான் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் பந்து வீச்சும் முழு ஆட்டமும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருந்தது. எதையும் நமக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்பதை போல எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியர்களை ஒருபோதும் எளிதாக குறைத்து மதிப்பிடக்கூடாது. 1.5 பில்லியன் மக்கள் கொண்ட நாட்டில் சீனியர் அணியில் நீங்கள் (இந்தியர்கள்) விளையாடுகிறீர்கள். எனவே, நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியாவை என்னால் பாரட்டாமல் இருக்க முடியவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com