மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாரான கேப்டன்கள்


மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாரான கேப்டன்கள்
x

இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்

பெங்களூரு,

13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும். இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்காக 8 அணிகளின் கேப்டன்களும் உலகக்கோப்பையுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

1 More update

Next Story