பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஷஷாங் சிங் மீது வழக்குப்பதிவு

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஷஷாங் சிங் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஷஷாங் சிங் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷஷாங் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவர்களது சமையல்காரர் விபேந்திர சிங் தோமர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

விபேந்திர சிங் தோமர் புகார் அளித்ததன் பேரில் ஷஷாங் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புகாரில் விபேந்திர சிங்,

போபாலுக்கு வேலைக்கு வந்தேன். மாதம் ரூ.15,000 சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு இலவசம் என்று கூறினார்கள். அதோடு, எதிர்காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், வேலைக்கு சேர்ந்த சில மணி நேரங்களிலேயே கடுமையான மன உளைச்சலை சந்தித்ததாக கூறியுள்ளார். சமைத்த உணவு சரியில்லை என்று கூறி பிரச்சனை பெரிதாகியது.

அங்குள்ள மோசமான சூழலைப் பார்த்துவிட்டு, வேலையை விட்டு ஊருக்குத் திரும்பப் போகிறேன் என்று சொன்னபோது, அவர்கள் கோபமடைந்தனர், என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், விபேந்திர சிங் மது அருந்திவிட்டு சமையல் செய்ததை தாங்கள் தட்டி கேட்டதால் அவர் பொய் புகார் அளித்ததாக ஷஷாங் சிங் , அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com