சாம்பியன்ஸ் டிராபி 2025: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் விவரம்

image courtesy:twitter/@ICC
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது.
துபாய்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.
லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் நாளை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன. 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து லாகூரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் விவரம்:-
அதிக ரன்கள்:
1. பென் டக்கெட் - 227 ரன்கள்
2. ஜோ ரூட் - 225 ரன்கள்
3. இப்ராகிம் ஜத்ரன் - 216 ரன்கள்
4. டாம் லதாம் - 187 ரன்கள்
5. ஸ்ரேயாஸ் ஐயர் - 150 ரன்கள்
அதிக விக்கெட்டுகள்
1. மேட் ஹென்றி - 8 விக்கெட்டுகள்
2. அஸ்மத்துல்லா ஓமர்சாய் - 7 விக்கெட்டுகள்
3. வில்லியம் ஒ ரூர்க் /பென் துவார்ஷுயிஸ் / ஜோப்ரா ஆர்ச்சர் - 6 விக்கெட்டுகள்.






