சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு


சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
x

Image Courtesy: @ICC

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது. அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story