சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம்...பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து


சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம்...பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து
x

image courtesy: AFP

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் லாகூரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் விளையாடும் வீரர்களை (பிளேயிங் லெவன்) இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் விக்கெட் கீப்பராக ஜேமி ஸ்மித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பில் சால்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பில் சால்ட், பென் டக்கட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

1 More update

Next Story