சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த மேட் ஹென்றி


சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த மேட் ஹென்றி
x

image courtesy:twitter/@ICC

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை மேட் ஹென்றி படைத்துள்ளார்.

பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

1 More update

Next Story