சாம்பியன்ஸ் டிராபி: 2-வது இந்திய பந்துவீச்சாளராக மோசமான சாதனை படைத்த முகமது ஷமி


சாம்பியன்ஸ் டிராபி: 2-வது இந்திய பந்துவீச்சாளராக மோசமான சாதனை படைத்த முகமது ஷமி
x

image courtesy:twitter/@BCCI

நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் முகமது ஷமி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி 74 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்களை வாரி வழங்கிய 2-வது இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதில் உமேஷ் யாதவ் 2013-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 75 ரன்கள் வழங்கியதே முதலிடத்தில் உள்ளது.

1 More update

Next Story