சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு


சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @ICC

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த போட்டி தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட இவ்விரு அணிகளும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்க தீவிரம் காட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story