சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியை அவர்களால் மட்டுமே வீழ்த்த முடியும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்


சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியை அவர்களால் மட்டுமே வீழ்த்த முடியும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்
x

image courtesy:ICC

தினத்தந்தி 4 March 2025 7:11 AM IST (Updated: 4 March 2025 10:05 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை.

லண்டன்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி விளையாடிய 3 லீக் ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்று நான் நினைக்கேறன். இருப்பினும் துபாய் மைதானத்தில் அது சற்று சந்தேகம்தான்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story