சாம்பியன்ஸ் டிராபி; வங்காளதேச துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட இளம் வீரர்


சாம்பியன்ஸ் டிராபி; வங்காளதேச துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட இளம் வீரர்
x

Image Courtesy: AFP

8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.

டாக்கா,

8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்தியாவுக்கு உள்ள ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த தொடரில் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ள வங்காளதேச அணி நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையில் களம் காண்கிறது. அந்த அணி வரும் 20ம் தேதி இந்தியாவையும், 24ம் தேதி நியூசிலாந்தையும், 27ம் தேதி பாகிஸ்தானையும் சந்திக்கிறது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வங்காளதேச அணியின் துணை கேப்டனாக இளம் வீரரான மெஹதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மெஹதி ஹசன் மிராஸ் இதுவரை வங்காளதேச அணிக்காக 51 டெஸ்ட், 103 ஒருநாள் மற்றும் 29 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story