தூத்துக்குடி - கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி - கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

மதுரை,

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட கல்பட்டி சத்திரம் ரெயில்நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடியில் இருந்து வருகிற 6, 13, 27, ஜூன் 3 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17616), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப் பாதை வழியாக செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து வருகிற 30-ந்தேதி காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354), திண்டுக்கல்,கரூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். திருச்சி வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com