215 ரன்கள் சேஸ்... ஐபிஎல் பிளேஆப் வரலாற்றில் புதிய சாதனை படைத்த குஜராத்

ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்த அணி என்ற சாதனையை குஜராத் படைத்தது.
215 ரன்கள் சேஸ்... ஐபிஎல் பிளேஆப் வரலாற்றில் புதிய சாதனை படைத்த குஜராத்
Published on

முல்லன்பூர்,

முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ராஜஸ்தான் அதிரடி

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடி வெறும் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது.

கில் சதம்

பின்னர் 215 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி வெற்றி பாதையை அமைத்தார். அவருக்கு துணையாக சாய் சுதர்சன் 58 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணி இலக்கை எட்டியதுடன், அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. அங்கு நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இதன் மூலம் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்த அணி என்ற சாதனையை குஜராத் படைத்தது.

ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்:

215 ரன்கள் - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2026)

204 ரன்கள் - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

200 ரன்கள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

X

Daily Thanthi
www.dailythanthi.com