

சென்னை,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ்கேப்டன் ருதுராஜ் கெய்க்
வாட் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
'ராஜஸ்தா னுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய கவுகாத்திஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. இதில்நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோரை எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்களின் புதிய பவுலர்கள் சீதோஷ்ண நிலையை கச்சிதமாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடிக்குள்ளாக்கினர். நாங்கள் இது போன்ற ஆடுகளங்களில் விளையாடி பழக்க மில்லை. சூழலுக்கு தக்க படி தகவமைத்து கொண்டு விளையாடும் அனுபவம் எங்களிடம் குறைவாக இருக்கலாம். ஆனால் இது ஒரு புதிய அணி. எனவே அவர்கள் மெதுவாக கற்றுக்கொள் வார்கள். அதிக போட்டி களில் விளையாடும் போது அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார் கள்.சேப்பாக்கம் ஆடுகளத் தன்மை எப்படி இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் உள்ளூரில் 7 ஆட்டங்களில் விளையாட உள்ளோம். ஆடுகளம் எப்படி இருந்தாலும் முடிந்த அளவுக்கு அதற்கு ஏற்ற வாறு எங்களை மாற்றிக் கொண்டு விளையாட முயற்சிப்போம்' என்றார்.