சேப்பாக்கத்தில் சென்னை- ஐதராபாத் ஆட்டம் - ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சென்னை- ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை காலை தொடங்குகிறது.
சேப்பாக்கத்தில் சென்னை- ஐதராபாத் ஆட்டம் - ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது ஆட்டம் இதுவாகும்.

சென்னை- ஐதராபாத் மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com