காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது: சென்னை வீரர் ஓவர்டன்

காயம் காரணமாக சென்னை அணியின் முக்கிய வீரரான ஜேமி ஓவர்டன் விலகி உள்ளார்.

காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது: சென்னை வீரர் ஓவர்டன்
Published on

சென்னை,

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது.இந்நிலையில் காயம் காரணமாக சென்னை அணியின் முக்கிய வீரரான ஜேமி ஓவர்டன் விலகி உள்ளார்.

இது தொடர்பாக ஜேமி ஓவர்டன் கூறியதாவது,

தொடரின் இறுதிக்கட்டத்தில் சென்னை அணியிலிருந்து விலகியது. மிகுந்த வருத்தமளிக்கிறது! இந்த ஆண்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மேலும் சென்னை அணி வீர்ரகள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆதரவிற்கு சென்னை அணி ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இது மிகவும் அற்புதமாக இருந்தது, உங்கள் அன்பை நான் மனதாரப் பாராட்டுகிறேன். என தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com