தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் சென்னை வீரர்

இந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது
கேப்டவுன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அணியில் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக அதிரடியாக ஆடிய டெவால்டு பிரேவிஸ் இடம் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரீவிஸ், கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ், லெசெகோ செனோக்வானே, பிரெனலன் சுப்ராயென், கைல் வெர்ரெய்ன், கோடி யூசுப்.






