

சென்னை,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்து. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், பஞ்சாப்பிற்கு எதிரான தோல்வியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த 6 ஆட்டங்களில் கடைசி 5 ஆட்டங்களில் சென்னை தோல்வியடைந்தது. தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் சென்னை தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் சேப்பாக்கத்தில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை பெற்ற வெற்றி , தோல்வி விவரம்:-
2023 - 8 ஆட்டங்களில் 5 வெற்றி, 3 தோல்வி
2024 - 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்வி
2025 - 6 ஆட்டங்களில் 1 வெற்றி, 5 தோல்வி
2026 - 1 ஆட்டத்தில் 1 தோல்வி (நடப்பு ஆண்டு இதுவரை)
சென்னை அணியின் கோட்டையாக கருதப்பட்ட சேப்பாக்கம் மைதானம் தற்போது எதிர் அணிகளின் கோட்டை என்ற நிலைக்கு மாறி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை என ரசிகர்கள் கருதுகின்றனர்.