ஐ.பி.எல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 24வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்சு பந்து வீச்சை தோவு செய்துள்ளது. #IPL #CSK #RCB
ஐ.பி.எல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) ஒன்றில் தோல்வியும் (பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது.

பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் சென்னையும், 7-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன.

இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி விடும் என சென்னை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

ரசிகர்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி பெங்களூரு அணி முதலில் பேட் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com