

ஐதராபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று ஐதரா பாத்தில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்க ளான சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின் றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.