

சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்த போட்டியில் விளையாட சென்னை அணி வீரர்கள் கவுகாத்தி சென்றடைந்தனர். கவுகாத்தியில் இன்று அவர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.