

சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 30-ந்தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது.
இந்த நிலையில் சென்னை ரசிகர்களை குதூகலப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் முதல் முறையாக 'ரோர்26' என்ற பெயரில் மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்டேடியத்தில் அரங்கேறும் இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சி.எஸ்.கே. அணிக்காக விளை யாடிய நட்சத்திரங்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளிவிஜய், பத் ரிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜாலியாக கலந்துரையாடுகிறார்கள். மேலும் இவர்கள் தற்போதைய சி.எஸ்.கே. அணி வீரர்களுடன் இணைந்து காட்சி போட்டி உள்ளிட்ட சில சுவாரசியமான விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.
ஆஸ்கார் விருது பெற்றவரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றன.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளதாக சென்னை அணி அறிவித்துள்ளது.