

சார்ஜா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:-
சென்னை:- ருதுராஜ் கெய்குவாட், பாப் டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில் வுட்
பெங்களூரு:- விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், கே.எஸ்.பரத், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டிம் டேவிட், சஹா, ஷர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.