இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வாக வாய்ப்பு..!

சேத்தன் சர்மாவை மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வாக வாய்ப்பு..!
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமாக தோற்று வெளியேறியது.

இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமயிலான தேர்வுக்குழு சமீபத்தில் கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மேற்கொண்டது

புதிய தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா நாயக் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

மேலும் புதிய தேர்வுக்குழுக்கான நேர்காணல் மும்பையில் நடைபெற்று வந்த நிலையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதுஇந்த நிலையில் சேட்டன் சர்மாவை மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.குறுகிய காலத்துக்கு அவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com