

மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராஞ்சி டிராபி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சவுராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் அணிகள் இடையே நடைபெற்றும் குரூப் -பி பிரிவின் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணிக்காக ஆடி வரும் புஜாரா இன்று இரட்டை சதம் அடித்தார். 355 பந்துகளில் 204 ரன்கள் குவித்த புஜாரா ஆட்டமிழந்தார். புஜாரா உள்ளூர் போட்டிகளில் மொத்தமாக அடிக்கும் 12 வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம், உள்ளூர் போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை புஜாரா பெற்றுள்ளார்.
இதற்கு முன் விஜய் மெர்சண்ட் என்ற வீரர் 11 இரட்டை சதம் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. விஜய் ஹசாரே, ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோர் 10 இரட்டை சதங்கள் அடித்துள்ளனர். விரைவில் இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், தான் மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதை புஜாரா நிரூபித்துள்ளார்.