

இலங்கைக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக , இந்திய அணி வீரர்கள் பலரின் தர வரிசை உயர்ந்து உள்ளது.
பேட்ஸ்மேன்கள் தர வரிசையில், செத்தேஷ்வர் புஜாரா, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் சதமடித்ததால், 888 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி, தனது 5-வது இரட்டை சதம் அடித்ததால், 877 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 941 புள்ளிகளுடன் தொடர்ந்து நீடித்து வருகிறார். முரளி விஜய் 28-வது இடத்துக்கும் ரோஹித் ஷர்மா 46-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஷ்வின் முறையே 2 மற்றும் 4-ம் இடத்தில் இருக்கின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் நீடித்து வருகிறார். இந்தியாவின் புவ்னேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா முறையே 28 மற்றும் 30-வது இடத்தில் இருக்கின்றனர்.