முதல்-அமைச்சர் விஜய்யின் வைரல் சைகை... புதுச்சேரி மைதானத்தை அலறவிட்ட ஆஸ்திரேலிய வீரர் - வீடியோ வைரல்

புதுச்சேரியில் இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
சாம் கான்ஸ்டாஸ்
Published on: 

புதுச்சேரி,

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியின்போது, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் வீரர் சாம் கான்ஸ்டாஸ், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் புகழ்பெற்ற சைகையை செய்து காட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வைரல் சைகை

புதுச்சேரியில் இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் களத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்தார்.

அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் புகழ்பெற்ற சைகையை செய்து காட்டி செய்யுமாறு சாம் கான்ஸ்டாஸிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சாம் கான்ஸ்டாஸும் அந்த சைகையை செய்து காட்டினார்.

கவனம் பெறும் வீடியோ

சாம் கான்ஸ்டாஸ் விஜய் பாணியில் சைகை செய்ததைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com