பயிற்சியாளர் கம்பீர் என்னை அதிகமாக நம்புகிறார்: ஆகாஷ் தீப் பேட்டி


பயிற்சியாளர் கம்பீர் என்னை அதிகமாக நம்புகிறார்:  ஆகாஷ் தீப் பேட்டி
x

2-வது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இதில் பர்மிங்காமில நடந்த 2-வது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார். அத்துடன் ஓவலில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் விக்கெட் தடுப்பாளராக அனுப்பப்பட்ட அவர் அரைசதம் (66 ரன்) எடுத்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் இங்கிலாந்து தொடர் குறித்து ஆகாஷ் தீப் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஓவல் டெஸ்டில் அரைசதம் அடித்த பிறகு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்னிடம் வந்து, ‘உன் திறமை குறித்து உனக்கு சரியாக தெரியவில்லை. உன்னால் இதை செய்ய முடியும் (அரைசதம்) என நான் எப்போதும் கூறிக்கொண்டு இருந்ததற்கான காரணம் புரிகிறதா என கேட்டார். இந்திய அணிக்காக இதே போல் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும்’ என்று கூறினார். கம்பீர் அதீத ஆர்வம் கொண்ட ஒரு பயிற்சியாளர். அவர் எப்போதும் எங்களை ஊக்குவிப்பார். நான் என்னை நம்புவதை விட அவர் என்னை அதிகமாக நம்புகிறார். குறிப்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.

இவ்வாறு ஆகாஷ் தீப் கூறினார்.

1 More update

Next Story