தொடர் தோல்வி... மும்பை அணியின் பின்னடைவுக்கு காரணம் என்ன.?

மும்பை அணி இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி கண்டு துவண்டு போயுள்ளது.
தொடர் தோல்வி... மும்பை அணியின் பின்னடைவுக்கு காரணம் என்ன.?
Published on

மும்பை,

18வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது வரை மொத்தம் 25 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி கண்டு துவண்டு போயுள்ளது.

மும்பை அணி எஞ்சிய 9 ஆட்டங்களில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் (5 ஆட்டத்தில் 106 ரன்), திலக் வர்மா (43 ரன்) ஜஸ்பிரித் பும்ரா (ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை) ஆகியோரின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை.

இதே போல் ஆல்-ரவுண்டரும். கேப்டனுமான ஹர்திக் பாண்ட்யா வும் (81 ரன் மற்றும் 2 விக்கெட்) ஜொலிக்கவில்லை. தொடர்ந்து சொதப்புவதால் இவர்களில் யாரையாவது அணி நிர்வாகம் வெளியே உட்கார வைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை அணியின் செயல்பாடு குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி 'மும்பை அணியின் கேப்டன்ஷிப் பலவீனமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு தேவை என்றால், ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப்பில் இருந்து விலகி, அந்த பொறுப்பை ரோகித் சர்மாவிடம் மீண்டும் கொடுக்க வேண்டும். நீங்கள் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய போது ஒரு அநீ தியை இழைத்தீர்கள்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com