‘கொரோனா பாதிப்புக்கு மாற்று வீரர்’ - ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று வீரர் வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
‘கொரோனா பாதிப்புக்கு மாற்று வீரர்’ - ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை
Published on

லண்டன்,

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தங்கள் நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வழிகாட்டுதலின்படி மருத்துவ ரீதியான உயரிய பாதுகாப்பு மற்றும் முறையான பரிசோதனைக்கு பிறகே வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள். ஆனால் அதையும் மீறி டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு வகையில் வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி.க்கு கோரிக்கை விடுத்துள்ளது. டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே மாற்று வீரர் அனுமதியை கோரியுள்ளோம். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு அல்ல. டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இதற்கான ஒப்புதலை ஐ.சி.சி. வழங்கும் என்று நம்புகிறோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com