பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப்புக்கு கொரோனா

கொரோனா உறுதியான நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டிலில் இருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப்புக்கு கொரோனா
Published on

ராவல்பிண்டி,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் வருகிற 4-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவரால் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஏற்கெனவே வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் ஆகியோர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் கொரோனாவால் விலகியிருப்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com