கவுண்டி கிரிக்கெட்; கெய்க்வாட்டுக்கு மாற்றாக பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்த யார்க்ஷயர்

Image Courtesy: @BCCI
ருதுராஜ், இன்று சர்ரே அணிக்கு எதிராக தனது முதல் கவுண்டி போட்டியில் களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் உடனான தனது ஒப்பந்தத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக சில தினங்களுக்கு முன்னர் விலகினார். இந்தச் செய்தியை யார்க்ஷயர் கிரிக்கெட் கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ருதுராஜ், இன்று சர்ரே அணிக்கு எதிராக தனது முதல் கவுண்டி போட்டியில் களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் இங்கிலாந்துக்கு பயணம் செய்யமாட்டார் என்பது உறுதியாகியது. அவரது இந்தத் திடீர் விலகலுக்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
ருதுராஜின் விலகல் குறித்து யார்க்ஷயர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், யார்க்ஷயர் அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பாகிஸ்தானின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.






