24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய அணி வீரருக்கு கொலை மிரட்டலா?

2009 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இலங்கை வீரர்கள் ஜெயவர்தனே, சங்கக்காரா காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய அணி வீரருக்கு கொலை மிரட்டலா?
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் எதிரான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்த தொடருக்காக 24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 1998 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானது.

அந்த கொலை மிரட்டலில் உங்கள் கணவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால் அவர் உயிருடன் நாடு திரும்ப மாட்டார் என சமூக வலைதள பதிவு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது அந்தத் தகவல் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் ,அந்த சமூக வலைதள பதிவு குறித்து நாங்கள் அறிவோம். அது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இரு நாட்டு அரசு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இது மாதிரியான சமூக வலைதள பதிவுகளை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. இப்போதைக்கு இது குறித்து வேறெதுவும் சொல்வதற்கு இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இலங்கை வீரர்கள் ஜெயவர்தனே , சங்கக்காரா காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com