கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு இன்று திருமணம்

இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியும், தொழிலதிபருமான சானியா சந்தோக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு மும்பையில் உள்ள ராயல் வெஸ்டர்ன் இந்தியா டர்ப் கிளப்பில் 'மெஹந்தி' மற்றும் 'சங்கீத்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சச்சினின் நெருங்கிய நண்பர்களான ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com