

புதுடெல்லி,
அமேசான் பிரைம் வீடியோ கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில், கிரிக்கெட் வாரியம் ஒன்றிடம் இருந்து லைவ் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது. பல ஆண்டுக்கான இந்த ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் (ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து போட்டிகளையும்) போட்டிகளை லைவாக பிரைம் வீடியோவில் காண முடியும்.
இந்நிலையில், வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் அமேசான் ப்ரைமில் கிரிக்கெட் நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், முதல் போட்டியாக நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் இடையோன டெஸ்ட் போட்டி நேரலை செய்யப்பட உள்ளது. இந்த போட்டி தொடர் முழுவதும் ஒளிபரப்பப்பட உள்ளது. பிரைம் வீடியோவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், இந்த போட்டிகளை லைவாக காண அனுமதிக்கப்படும்.