இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இந்தியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியை ரோகித் சர்மாவும் வழிநடத்த உள்ளனர்.

இந்த நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை பிரிமீயர் லீக்கில் அசத்திய அவிஷ்கா பெர்னாண்டோ, சமரவிக்ரமா, சமிகா கருணாரத்னே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே சமயம் சன்டிமால், அசிதா பெர்னாண்டோ, லக்ஷன் கழற்றி விடப்பட்டுள்ளனர். அணியின் கேப்டனாக தசுன் ஷனகா தொடருகிறார். 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக ஹசரங்காவும், ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக குசல் மென்டிசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி வருமாறு:-

ஷனகா (கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சமரவிக்ரமா, குசல் மென்டிஸ், அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசரங்கா, அஷன் பண்டாரா, தீக்ஷனா, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, மதுஷன்கா, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷன், லாஹிரு குமார் மற்றும் பானுகா ராஜபக்சே, நுவான் துஷாரா (20 ஓவர் போட்டிக்கு மட்டும்), ஜெப்ரி வான்டர்சே, நுவானிது பெர்னாண்டோ (ஒரு நாள் போட்டிக்கு மட்டும்).

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com