

சென்னை,
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நாளை மறுநாள் விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், விஜய்க்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தெடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது,
வெற்றியாளரை வாழ்த்த நான் யார்? மக்கள் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார்கள். இதுதான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.ஒரு ஜனநாயகத்தில், முடிவெடுக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. இந்த முறை, வாக்குப்பதிவு மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. பலபேர் வெளிநாடுகளில் இருந்துவந்து வாக்கு செலுத்தியதை நான் முதல்முதலாக பார்த்தேன். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த ஒரு உண்மையான வாய்ப்பு, மேலும் ஒரு புதிய தலைமை உருவாகவிருக்கிறது. இளம் தலைமுறையினரும் மக்களும் அவரிடம் ஒரு மாபெரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். தவெக தலைவர் விஜய்க்கும், அக்கட்சிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.