கிரிக்கெட் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலி

கோவா ரஞ்சி கிரிக்கெட் அணியின் வீரர் கிரிக்கெட் விளையாடியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கிரிக்கெட் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலி
Published on

பனாஜி

கோவா ரஞ்சி அணியில் விளையாடியவர் ராஜேஷ் கோட்கே. சமீபகாலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், மர்கோவா நகரில் உள்ள மைதானத்தில் நேற்று ராஜேஷ் கோட்கே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 30 ரன்கள் சேர்த்து ஆடி வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆடுகளத்தில் சரிந்தார்.

இதையடுத்து, சகவீரர்கள் ராஜேஷை அருகில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ராஜேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மர்கோவா கிரிக்கெட் கிளப்பின் செயலாளர் அபூர்வ பெம்ரே கூறுகையில், ராஜேஷ் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கோவா மாநிலத்துக்காக ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளிலும், பல ஒருநாள் போட்டிகளிலும் ராஜேஷ் பங்கேற்றுள்ளார். ராஜேஷ் இறந்தது கோவா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com