விஜய் பதவியேற்பு விழாவில் 'சிஎஸ்கே' வீரர்? - "கடமையை விட மேட்ச் முக்கியம்" - வைரலாகும் அஸ்வினின் பதிவு

இந்த சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே-வின் நட்சத்திர பவுலராக கம்போஜ் ஜொலித்து வருகிறார்.
விஜய் பதவியேற்பு விழாவில் 'சிஎஸ்கே' வீரர்? - "கடமையை விட மேட்ச் முக்கியம்" - வைரலாகும் அஸ்வினின் பதிவு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவர் விஜய், முதல்-அமைச்சராக நேற்று காலை பதவியேற்றார். இந்த விழாவைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின், ஒரு விசித்திரமான காட்சியைக் கவனித்தார்.

விஜய் அருகில் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், அச்சு அசல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் போலவே இருந்தார். இதைக்கண்ட அஸ்வின் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.

நேற்று மாலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதவிருந்த நிலையில், அந்த பாதுகாப்பு அதிகாரியின் புகைப்படத்தைப் பகிர்ந்து அஸ்வின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது;

"கடமை முக்கியம் தான் என எனக்குத் தெரியும் கம்போஜ். ஆனால் இன்று நமக்குப் மிக முக்கியமான போட்டி . அதுவும் பகல் நேர ஆட்டம். அதனால் சீக்கிரம் ஒரு டாக்ஸி பிடித்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து சேரு. இன்று பெரிய போட்டி காத்திருக்கிறது," என நகைச்சுவையாக பதிவிட்டார்.

Also Read
இனி ஒவ்வொரு மேட்சும் பைனல் தான்... பிளே-ஆப் அணிகளை தீர்மானிக்கப்போகும் மும்பை, லக்னோ?
விஜய் பதவியேற்பு விழாவில் 'சிஎஸ்கே' வீரர்? - "கடமையை விட மேட்ச் முக்கியம்" - வைரலாகும் அஸ்வினின் பதிவு

இந்த சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே-வின் நட்சத்திர பவுலராக கம்போஜ் ஜொலித்து வருகிறார். ஐபிஎல் 2026 சீசன் சென்னை அணிக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக உள்ளது. தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும், தற்போது மீண்டு வந்து புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com