

புதுடெல்லி,
ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆயுஷ் மாத்ரே தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகியதை அடுத்து உத்தரகாண்டை சேர்ந்த 32 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு சென்னை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகாஷ் மத்வால் ஐ.பி.எல். தொடரில் 17 ஆட்டங்களில் ஆடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி இருக்கும் அவரை இந்த ஆண்டு எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் அவர் மும்பை அணியில் வலைப்பயிற்சி பவுலராக இருந்து வந்தார்.