’ஒரு காலத்துல எப்படிப்பட்ட டீம் இது... ரொம்ப வருத்தமா இருந்துச்சி’ - அஸ்வின் ஆதங்கம்

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது.
’ஒரு காலத்துல எப்படிப்பட்ட டீம் இது... ரொம்ப வருத்தமா இருந்துச்சி’  - அஸ்வின் ஆதங்கம்
Published on

சென்னை,

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சேப்பாக்கம் மைதானத்திலேயே சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் இந்த நிலையை பார்த்து முன்னாள் வீரர் அஸ்வின் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அஸ்வின் பேசுகையில், ’ருதுராஜ் பிட்ச் கொஞ்சம் ஸ்டிக்கியாக இருப்பதாக கூறி இருந்தார். ஆனால் இந்த பிட்சில் எதுவுமே இல்லை. பிளாட் பிட்ச் தான். அதனால் பவுலர்களை மனதில் வைத்து கூடுதலாக சில ரன்களை விளாசி இருக்க வேண்டும்.

சிஎஸ்கே ஒரு காலத்தில் எப்படிப்பட்ட டீம் தெரியுமா. சேப்பாக்கம் நான் ஆடிய மைதானம். சென்னைனா ஒரு கர்வம் வச்சிட்டு வாழுற ஆள் நான். 12வது ஓவரிலே சென்னை அணியோட உடல் மொழி சொல்லிவிட்டது. ரொம்ப வருத்தமா இருந்துச்சி அதை பார்க்க.

5 டைட்டில் என்பது மிகப்பெரிய லெகசி. ஆனால் அந்த லெகசியை ஆயுஷ் மாத்ரே மீதும், கார்த்திக் சர்மா மீதும் அழுத்தமாக போட கூடாது. இன்னும் சில ஆண்டுகளில் சிஎஸ்கே வீரர்கள் வளரும் போது மீண்டும் வீழ்த்த முடியாத அணியாக சிஎஸ்கே அணி மாறும். தோனி வந்தா சென்னை அணி வீரர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். அவர் வீரர்கள் அறையில் இருந்தாவே தனி வைப்தான். அவரை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,சென்னை அணி தனது அடுத்த லீக் போட்டியில் பெங்களூரு அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com