

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர். இந்தியாவுக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக 2021 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். இந்திய அணியில் இடம்பெற்றதை விட ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்தவர், அதன்பின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராகுல் சாஹரை ரூ.5.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுத்தது. வரவிருக்கும் சீசனில் சென்னை அணிக்காக களமிறங்கவுள்ள நிலையில் தான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எடுத்த மிக முக்கிய முடிவு குறித்து வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ராகுல் சாஹர், தனது நீண்ட நாள் காதலியான இஷானி ஜோஹரை கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி கோவாவில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணத்தில் கரம் பிடித்தார். 2019-லேயே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. சுமார் மூன்று ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு இடையே தற்போது தனது மனைவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார் ராகுல். மனைவி இஷானி ஜோஹரிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நான் யாரென்றே எனக்குத் தெரியாத வயதில், எனது மதிப்பு என்னவென்று உணராத நிலையில், நான் கட்டியெழுப்ப விரும்பிய வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே நான் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன்.
அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நான் எதிர்பார்க்காத பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.இன்றுடன் எனது வாழ்வின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது.
மேலும், தான் இளம் வயதிலேயே திருமணம் செய்துவிட்டதாகவும், இது ஒரு முடிவு அல்ல, தன்னை மீண்டும் கண்டுபிடிக்கும் விடுதலைக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முடிவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹர், தனது மனைவி இஷானி ஜோஹரிடம் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.