ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய கம்மின்ஸ், ஹேசில்வுட்

வங்காளதேச டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஹேசில்வுட்
Published on

மெல்போர்ன்,

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசில்வுட் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடர்

வங்காளதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் நடைபெற உள்ளது. ரண்டாம் டெஸ்ட் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை மெக்கேவில் கிரேட் பேரியர் ரீப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மைக்கேல் நேசர் அவுட்

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அணிக்கு திரும்பியுள்ளனர். ஆஷஸ் தொடரில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நேசர் கழற்றி விடப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமருன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க். ஜேக் வெதரால்டு, வெப்ஸ்டர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com