16 முறை…சர்வதேச டி20யில் மோசமான சாதனை படைத்த தசுன் ஷனகா

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
16 முறை…சர்வதேச டி20யில் மோசமான சாதனை படைத்த தசுன் ஷனகா
Published on

கொழும்பு,

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை இலங்கை அணியின் தசுன் ஷனகா பதிவு செய்துள்ளார். இதன்மூலம், இதற்கு முன் 15 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் இருந்த ருவாண்டா வீரர் ஜாப்பி பிமென்மானாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Also Read
டி20 உலகக் கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்?
16 முறை…சர்வதேச டி20யில் மோசமான சாதனை படைத்த தசுன் ஷனகா

இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் தசுன் ஷனகா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 16 முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை தசுன் ஷனகா தனது பெயரில் பதிவு செய்தார். இருப்பினும் இப்போட்டியில், இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com