500 டி20 போட்டியில் விளையாடி டேவிட் மில்லர் புதிய சாதனை

500 டி20 போட்டியில் விளையாடி தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சாதனை படைத்துள்ளார்.
500 டி20 போட்டியில் விளையாடி டேவிட் மில்லர் புதிய சாதனை
Published on

கயானா, 

கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்களை சேர்த்தார்.

இதனால் பார்படாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இப்போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சிறப்பு சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.அதன்படி இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் டேவிட் மில்லர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 500-வது டி20 போட்டியில் விளையாடினார். இதன் மூலம் டி-20 கிரிக்கெட்டில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் மற்றும் உலகின் ஆறாவது வீரர் என்ற பெருமையை டேவிட் மில்லர் பெற்றுள்ளார். ,கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, சோயப் மாலிக், சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோருக்கு அடுத்து டேவிட் மில்லர் இடம் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com