டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்: 5-ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது.
டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்: 5-ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
Published on

சிட்னி,

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி பாலோஆன் ஆனது. ஸ்டார்க் 29 ரன்களுடன் (55 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோஆன் வழங்கியதால் 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு இருள் சூழ்ந்ததால், போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி போட்டியை நடுவர் நிறுத்தினார். நீண்ட நேரம் மோசமான வானிலையே நீடித்தது. மாலையில் மழை தூரலும் விழுந்ததால் அத்துடன் 4வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நேற்றைய தினம் வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன.

இந்த நிலையில். 5 ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால், தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை படைக்க இருப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com