டி காக் அதிரடி சதம்....மும்பை அணி 195 ரன்கள் குவிப்பு

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.


டி காக் அதிரடி சதம்....மும்பை அணி 195 ரன்கள் குவிப்பு
Published on

மும்பை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு ரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கி ழமை) நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ரிக்கல்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து டி காக் , நமன் திர் இருவரும் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். நமன் திர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பஞ்சாப் அணியின் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட டி காக் சதமடித்து அசத்தினார்.

இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com